கத்தி சண்டை படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சிகரமாக நடித்தது குறித்து அப்பட இயக்குநர் சுராஜ் அளித்த விளக்கத்துக்கு நடிகைகள் நயன்தாரா மற்றும் தமன்னா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இதையடுத்து இயக்குநர் சுராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்கள்.
சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரா, ஆவணப்பட இயக்குநர். மற்றும் திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிபவர். ஸ்ருதி இயக்கிய ஏ ஃபார் ஆஃப்டர்நூன், கடந்த வருடம் சிறந்த ஆவணப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இயக்குநர் சுராஜ் - தமன்னா விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவு எழுதியுள்ளார் ஷ்ருதி. அதில் அவர் கூறியிருப்பதாவது:
கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காண்பிக்காததற்காக இயக்குநரிடம் திட்டு வாங்குவதும் என் உதவி இயக்குநர் பணிகளில் ஒன்று. (எனவே இதுபோன்ற மனநிலை கொண்டவர்) இயக்குநர் சுராஜ் மட்டுமல்ல. முதல் படத்தில் ஐடம் பாடலுக்கு நடனமாடச் சொன்னதற்காக அழுத நடிகையை எனக்குத் தெரியும். பெண் காஸ்டியூம் டிசைனர் என்னிடம், இவர் ஏன் நடிக்க வந்தார் என்று கேள்வி எழுப்பினார்.
இன்னொரு கதாநாயகிக்குப் புடைவை அளிக்கப்பட்டது, ஏனெனில் அப்போதுதான் இடுப்பு நன்கு தெரியும் என்பதற்காக. இடுப்பின் அருகில் வைத்து கிளாப் அடிக்காமல் முகத்தின் முன்பு வைத்து கிளாப் அடித்த உதவியாளர் திட்டு வாங்கினார்.
ஒரு பெண்ணாக நான் கருதுவது, ஆணின் உடலை விடவும் பெண்ணின் உடல் மிகவும் அழகானது. அதை எந்தப் பார்வையில் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று அவர் பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா: தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்

அன்னைக்காக வாக்களிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த மகன்

ராம்குமாா் மரணம் தொடா்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


