ஐந்தாவது முறையாக இணையும் தனுஷ் - செல்வராகவன்?
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றான தனுஷ் - செல்வராகவன் ஐந்தாவது முறையாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சென்னை: தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றான தனுஷ் - செல்வராகவன் ஐந்தாவது முறையாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர்தான் நடிகர் தனுஷ். அதன் அபார வெற்றியைத் தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய நான்கு செல்வராகவன் படங்களில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஐந்தாவது முறையாக தனுஷ் - செல்வராகவன் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வராகவன் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கி முடித்து, ரிலீசுக்கு காத்திருக்கிறார். அதே போல் தனுஷும் கவுதம் மேனன், வெற்றி மாறன் படங்களில் நடித்து வருகிறார்.இவை முடிந்த பிறகு செல்வராகவன் படம் தொடங்க வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...