6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அவமானப்படுத்தியவர்களுக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் இருந்து வெளியேறினார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!

ஆர்ஜே பாலாஜியிடமிருந்து மரியாதை எதிர்பார்த்தது என் தவறுதான்...

Published On :

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குறித்த சர்ச்சையால் சமூக வலைத்தளத்திலிருந்து விலகியுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். 

சமீபத்தில் வெளிவந்த கடவுள் இருக்கான் குமாரு படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குறித்து சில காட்சிகள் கேலி செய்யும் தொனியில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் கோபமடைந்த நடிகையும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ட்விட்டர் தளத்தில் தன்னுடைய கண்டனங்களைப் பதிவு செய்தார். 

தன்னுடைய ட்விட்டர் தளத்தில் அவர் கூறியதாவது: சினிமா போன்ற மாற்றங்கள் உருவாக்கக்கூடிய சாதனத்தைக் கொண்டு மற்றவர்களின் உண்மையான உழைப்பைக் கிண்டலடிப்பவர்களைக் கண்டால் பரிதாபமாக உள்ளது. சென்னை வெள்ளத்தின்போது ஆர்.ஜே. பாலாஜி விளம்பரத்துக்காக உதவிகள் செய்தார் என்றால் அவருக்கு எப்படி இருக்கும்? நடிகர்கள் சிலரும் இயக்குநர்களும் திரையில் தவறான முன்னுதாரணத்தை அளிக்கிறார்கள். தமிழக இளைஞர்களை குடி, தேர்வுகளில் தோல்வி, பெண்கள்... இவற்றைத் தாண்டி வரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். என்னுடைய அடுத்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு அருமையான ஒரு வேடம் வழங்கமுடியும். இது உங்களுக்கும் உங்களைப் பின்தொடர்கிற ரசிகர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். நடிக்கத் தயாரா? மக்களை திரையரங்குக்கு அழைத்துவரும் ஜி.வி. பிரகாஷ் போன்ற நடிகர் எனக்குத் தேவை. எனக்கு வசூல் செய்யும் படமாகவும் அவருக்கு மரியாதையளிக்கும் படமாகவும் அது இருக்கும். இரு தரப்புக்கும் சாதகமாக இருக்கும்.   சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி, சித்தரிக்கப்பட்ட ஒன்று என்றால் அது 1000 பகுதிகளைத் தாண்டியிருக்குமா? நானே 1000 நிகழ்ச்சிகளைத் தாண்டவுள்ளேன். மக்கள் முட்டாள்கள் அல்ல. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குறித்து நான் எப்போதும் பெருமைகொள்வேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் இன்னமும் கடவுள் இருக்கான் குமாரு படத்தைப் பார்க்கவில்லை. ஒரு படத்தைப் பார்க்கவேண்டும் என்றால் அது எனக்கு உபயோகமாக இருக்கவேண்டும். டீசர் பார்த்தேன். அதைப் பற்றி எதுவும் சொல்லவிரும்பவில்லை. படத்தில் ஒரு வசனம் வருகிறது. ஒரகடத்தில் பிளாட் வாங்கவேண்டும் என்றால் ஒரு தம்பதியைப் பிரித்துவிடு என்று. இது எவ்வளவு கேவலமாக உள்ளது, இல்லையா? சொல்வதெல்லாம் உண்மை சித்தரிக்கப்பட்டது என்றால் எப்படி 1000 பகுதிகளைத் தாண்டி வெற்றிபெற்றிருக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.  

லட்சுமி ராமகிருஷ்ணனின் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் ராஜேஷ் அளித்த பேட்டியில், லட்சுமி ராமகிருஷ்ணனை மனத்தில் கொண்டு அந்தக் கதாபாத்திரத்தை நான் வடிவமைக்கவில்லை. நீங்கள் கவனித்திருந்தால், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்கிற வசனம் கூட அந்தக் காட்சியில் இருக்காது. அவருடன் நான் பணியாற்றியுள்ளேன். ஒரு இயக்குநராக அவர்மீது எனக்கு அதிக மதிப்பு உண்டு. படத்தில் காண்பித்த காட்சிகளின் மூலம் அவர் மனத்தைக் காயப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார். ஆர்ஜே பாலாஜி அளித்த பேட்டியில், இயக்குநர் சொன்னதை நான் செய்துள்ளேன். நான் எப்படி அந்தக் காட்சிக்கு பொறுப்பாகமுடியும் என்று பதிலளித்திருந்தார்.

இந்தப் பதிலுக்குப் பிறகு ட்வீட் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், ஆர்ஜே பாலாஜியிடமிருந்து மரியாதை எதிர்பார்த்தது என் தவறுதான் என்று கூறியுள்ளார். 

இந்தச் சர்ச்சை குறித்து ட்விட்டரில் பலரிடமும் விவாதம் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், கடைசியில் ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். தன்னைக் காயப்படுத்திய மற்றும் அவமானப்படுத்தியவர்களுக்கு வாழ்த்துகள் என்று கடைசியாக கூறி இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.