நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இசையமைப்பாளர் சந்திரபோஸ் குடும்பத்துக்கு விஷால் நிதியுதவி!

வறுமையில் வாடி வந்த பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் குடும்பத்துக்கு விஷால் நிதியுதவி அளித்துள்ளார். 

News image
Updated On :25 நவம்பர் 2016, 11:58 am

DIN

வறுமையில் வாடி வந்த பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் குடும்பத்துக்கு விஷால் நிதியுதவி அளித்துள்ளார். 

மனிதன், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட 300 படங்களுக்கும் மேலாக இசையமைத்து கவனம் பெற்றவர் சந்திரபோஸ். இவர் 2010-ல் தனது 60-வது வயதில் காலமானார். 

இந்நிலையில் சந்திரபோஸின் குடும்பம் வறுமையில் வாடுவதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. சந்திரபோஸின் மனைவி ராஜகுமாரி மருத்துவச் செலவுக்குக் கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் விஷால் உடனே அவர்களை அழைத்து தனது தேவி அறக்கட்டளை மூலமாக நிதியுதவி அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.