ஹீரோக்களுக்கு அதிக சம்பளம்: அமிதாப் பச்சன் கருத்து!
நடிகர் அமிதாப் பச்சன் தனது 74-வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார்.


நடிகர் அமிதாப் பச்சன் தனது 74-வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார்.
மும்பையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:
74 வயதான நான் எனக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடர்ந்து ஆர்வம் காண்பிப்பேன். பாகிஸ்தான் நடிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி கேட்கிறீர்கள். எல்லையில் நடந்துள்ள சம்பவங்கள் குறித்து மக்கள் மிகவும் கோபமாக உள்ளார்கள். நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ
வீரர்களின் தியாகத்தை நாம் போற்றவேண்டும்.
ஒரு படம் வெற்றிபெறாமல் போனால் நடிகர்கள் மீது பழி விழுகிறது. அவர்கள் அதிக சம்பளம் வாங்கியதால்தான் நஷ்டம் ஏற்பட்டது என்று. ஆனால் நடிகர்களால் திரையரங்குகளுக்கு ரசிகர்களைக் கொண்டுவரமுடியும். அதற்காக ஒரு கதாநாயகன் அதிகமாக சம்பளம் பெற்றால் என்ன தவறு? அதேசமயம் ஒரு படம் தோல்வியடைந்தால், அடுத்தப் படத்தில் குறைந்த சம்பளம்தானே கொடுக்கப்படுகிறது! என்று கூறினார்.
அமிதாப் பச்சனின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...