புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருட்டு பயலே-2 வில் முக்கிய வேடத்தில் அமலாபால்!

இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற  'திருட்டுப் பயலே' படத்தின் இரண்டாம் பாகத்தில், நடிகை அமலா பால் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2016, 8:41 am

DIN

சென்னை: இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற  'திருட்டுப் பயலே' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை அமலா பால் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ் மற்றும் மாளவிகா ஆகியோரது நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘திருட்டுப்பயலே’. கதையின் கருப்பொருளினால் சிறிய சர்ச்சையை உண்டாக்கிய அதேநேரத்தில் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் சுசி கணேசன் அறிவித்திருந்தார்.

இந்த படத்தில் ஜீவன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும், அப்பாஸ் கதாபாத்திரத்தில் பிரசன்னாவும் நடிக்கவிருப்பதாகவும் சுசி கணேசன் கூறியிருந்தார். அதேபோல் முதல்பாகத்தில் மாளவிகா ஏற்றிருந்த பாத்திரம் எல்லோராலும் கவனிக்கப்பட்ட ஒன்று. அந்த கதாபாத்திரத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என்பது குறித்து சுசி கணேசன் முடிவெடுக்க இயலாமல் இருந்தார்.

தற்போது மாளவிகா கதாபாத்திரத்தில் நடிக்க அமலாபால் ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தாயரிக்க இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.