ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நடிகை டாப்ஸியை பின் தொடர்ந்த மர்ம நபர்!

தன்னைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் புக முயன்ற நபரால் தான் அதிர்ச்சியடைந்ததாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 செப்டம்பர் 2016, 5:55 am

தன்னைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் புக முயன்ற நபரால் தான் அதிர்ச்சியடைந்ததாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கை விபரம் வருமாறு:

ஒரு நடிகையாக ரசிகர்களால் விரும்பப்படுவதை  நாங்கள் விரும்பக் கூடியவர்கள்தான். ஆனால் எங்களை சிறப்பு கவனத்துக்கு உரியவர் என்று உணரச் செய்வதற்கும், அச்சமூட்டுவதற்கும் சிறிய வேறுபாடுதான் உள்ளது.

அந்த வகையில் என்னுடைய  படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருக்கும் பாதுகாப்பு வளையத்தையும் மீறி  இந்த நபர் என்னை முதலில் சந்திக்க வந்த பொழுது நான் அதிர்ச்சியடைந்தேன்.  என்னைப்  பார்க்க வரும் ரசிகர்களையும், என்னுடைய நடிப்பை பாராட்டுபவர்களையும் நான் மதிக்கிறேன்.  அனால் என்னுடைய அந்தரங்கத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த நபருடன் நான் நல்ல முறையில்தான் பேசிவந்தேன். ஆனால் என்னுடைய வீட்டுக்குள் அவர் நுழைய முயன்ற பொழுதுதான் நான் எச்சரிக்கை  அடைந்தேன். 

இது தொடர்பாக நான் காவல் துறையிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.ஆனால் மீண்டுமொரு முறை அவர் இவ்வாறு நடந்து கொண்டால் அவரால் எனக்கு ஆபத்து என்று காவல்துறையிடம்ம் புகார் செய்ய வேண்டி வரும்.

இவ்வாறு டாப்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.