நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமணம் எப்போது?
எப்போது திருமணம் செய்யவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்...


நாகார்ஜூனாவின் இளைய மகன், அகில் அகினேனிவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அகில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷ்ரியா புபாலைத் திருமணம் செய்ய உள்ளார். அகிலும் ஷ்ரியாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். இதனையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுவருகின்றன டிசம்பர் 9-ம் தேதி நிச்சயம் நடக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் அடுத்த வருடம் நடக்கும். தேதி இன்னும் முடிவாகவில்லை என்று நாகார்ஜூனா தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில் நாகார்ஜூனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவின் திருமணம் குறித்து இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள்.
நாக சைதன்யாவும் சமந்தாவும் சமீபகாலமாகக் காதலித்துவருகிறார்கள். எப்போது திருமணம் செய்யவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும் என நாகார்ஜூனா எண்ணுகிறார். இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...