சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமணம் எப்போது?

எப்போது திருமணம் செய்யவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்... 

News image
Updated On :9 செப்டம்பர் 2016, 7:29 am

ஐஏஎன்எஸ்

நாகார்ஜூனாவின் இளைய மகன், அகில் அகினேனிவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அகில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷ்ரியா புபாலைத் திருமணம் செய்ய உள்ளார். அகிலும் ஷ்ரியாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். இதனையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுவருகின்றன டிசம்பர் 9-ம் தேதி நிச்சயம் நடக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் அடுத்த வருடம் நடக்கும். தேதி இன்னும் முடிவாகவில்லை என்று நாகார்ஜூனா தரப்பு தகவல் தெரிவிக்கிறது. 

இந்நிலையில் நாகார்ஜூனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவின் திருமணம் குறித்து இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். 

நாக சைதன்யாவும் சமந்தாவும் சமீபகாலமாகக் காதலித்துவருகிறார்கள். எப்போது திருமணம் செய்யவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும் என நாகார்ஜூனா எண்ணுகிறார். இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.