காதல் திருமணம் செய்துகொண்டேன்: நடிகை சாட்னா டைடஸ்
இருவரும் மனதாரக் காதலித்து, பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம்...


நடிகை சாட்னா டைடஸ், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர், விஜய் ஆண்டனி நடித்து வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றவர். தமிழில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிச்சைக்காரன் படத்தைத் தமிழகம் முழுவது வெளியிட்டது கே.ஆர். பிலிம்ஸ். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக்கை சாட்னா ரகசியத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருடைய காதலுக்கு சாட்னாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இத்திருமணம் குறித்து கார்த்திக் ஒரு பேட்டியில் கூறியதாவது: திருமணம் நடந்து ஒருமாதமாகிவிட்டது. முறைப்படி பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளோம். திருமணத்துக்குப் பிறகு சாட்னா நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். விரைவில் ஊர் அறிய திருமணம் நடைபெறும் என்றார்.
இந்நிலையில் திருமணம் குறித்து சாட்னா - கார்த்திக் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறியிருப்பதாவது:
நாங்கள் இருவரும் மனதாரக் காதலித்து, இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்துகொண்டோம். வரும் ஜனவரி மாதம், எங்கள் குடும்பங்கள் உள்பட அனைவரின் ஆதரவுடன் எங்கள் திருமணம் நடைபெறும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...