பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரேஷ்மி மேனனுடன் விவாகரத்தா? - பாபி சிம்ஹா பரபரப்பு பதில்!

தனது மனைவி ரேஷ்மி மேனனுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது என்று நடிகர் பாபி சிம்ஹா விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :18 செப்டம்பர் 2016, 12:10 pm

DIN

தனது மனைவி ரேஷ்மி மேனனுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது என்று நடிகர் பாபி சிம்ஹா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நடிகர் பாபி சிம்ஹா - நடிகை ரேஷ்மி மேனன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்குப் பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டு ரேஷ்மி மேனன்  தனது கணவர் பாபி சிம்ஹாவின் படத்தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தார்.

ஆனால் கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளத்தில் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவருக்குள்ளும்  கருத்து வேறுபாடு தோன்றி உள்ளதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து பெறவிருப்பதாகவும் தகவல்கள் பரவத்  தொடங்கின.  இந்த தகவல் குறித்து இருவருமே விளக்கம் அளிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில் நடிகர் பாபி சிம்ஹா தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் "பிரிந்து விட்டோம் என்ற  வதந்திகளுக்கு விடையளிக்கவில்லை. ஆனால் ‘நாங்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டோம்’ என்பதனால் எங்களை அழைத்தவர்களின் அக்கறைகளுக்காக மட்டும் விடையளிக்கிறேன். நாங்கள் பிட்சாவை மட்டுமே பிரித்து சாப்பிடுகிறோம்" என்று பதில் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.