விஜய் சேதுபதியின் ‘றெக்க' டிரெய்லர்!
விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடி - லட்சுமிமேனன்.


காமன்மேன் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் - றெக்க. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடி - லட்சுமிமேனன். சதீஷ், கே.எஸ்.ரவிகுமார், கிஷோர், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ரத்தன் சிவா எழுதி இயக்கியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ரத்தன் சிவா: தெரிந்து செய்வது, தெரியாமல் செய்வது என தவறுகள் வேறுபடுகிறது. தெரியாமல் செய்த தவறுகள்தான் வருத்தங்களை உண்டாக்கி விடுகின்றன. அந்த விதத்தில், சின்னஞ்சிறு வயதில் செய்து விடுகிற தவறு, பின் வரும் நாள்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. பெரியவனாகி பக்குவம் வந்த பின் அந்த தவறை திருத்தி கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை கதாநாயகன் பயன்படுத்திக் கொண்டாரா? என்பதை ஆக்ஷன், நகைச்சுவை, காதல் என கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லுவதே கதை. காரைக்குடி, கும்பகோணம், மதுரை மற்றும் பாங்காங் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. டி.இமான் இசையமைப்பில் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...