நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கண்கண்ட தெய்வம் (1967)

இதே கதையை சுமார் 18 வருடங்கள் கழித்து 1985ல்...

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 7:07 am

ரா. சுந்தர்ராமன்

படிக்காமல் ஊர் சுற்றுபவர்களுக்குப் பிற்காலத்தில் அவர்களுடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதை சொன்ன படம்.

குடும்பத்தின் தலைவராக எஸ்.வி.ரங்காராவ். அண்ணன் தான் அனைத்தும் என்று நினைத்து, அண்ணன் கிழித்த கோட்டைத் தாண்டாமல், அண்ணன் சொல்வதைச் செய்யும் தம்பி முத்துசாமி (எஸ்.வி.சுப்பையா), முத்துசாமியின் மனைவியாக அன்னம் (பத்மினி). இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் (கள்ளபார்ட் நடராஜன், ஏ.வீரப்பன் மற்றும் மணி), அண்ணனுக்குக் கண் தெரியாத மகன். இவ்வாறு விவசாயம் செய்து கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் வசிக்கும் வீட்டுக்கு எதிர்வீட்டில் ரைஸ் மில் சொந்தக்காரராக ஓ.ஏ.கே.தேவர். அவருடைய தம்பியாக மனோகர் (சிவகுமார்). ஓ.ஏ.கே. தேவர் நண்பனாக கே.கண்ணன் சில காட்சிகளில் வந்து போகிறார்.

ஓ.ஏ.கே. தேவர், தன்னுடைய வியாபார வளர்ச்சிக்கு வங்கியில் வாங்கிய  ரூ.2 லட்சம் கடனுக்கு, முத்துசாமி மகன்கள் வங்கிக்குச் சொத்து ஜாமின் எழுதிக்கொடுக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட எஸ்.வி.ரங்காராவ், சொத்துக்களைப் பாகம் பிரிக்கிறார். இதில் ஆரம்பமாகிறது குடும்பச்சண்டை. சொத்து ஜாமின் எழுதிக் கொடுத்ததற்காக வங்கி, மகன்கள் மீது வழக்கு தொடுக்கிறது. இதற்கிடையே ஊரிலிருந்த வந்த  தனது மகன்களுக்கு கார் வாங்கிக் கொடுக்கிறார் முத்துசாமி, ஆனால், அந்த கார் கள்ளக் கடத்தலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட கார் என்று தெரிந்து மகன்களைக் கைது செய்கிறது போலீஸ். இந்த இரண்டு வழக்குகளிலிருந்து எப்படி விடுதலையாகி மீண்டும் ஒரே குடும்பமாக சேர்கிறார்கள் என்பதுதான் கதை.

சுமாராக ஒடிய படம் என்றாலும், பத்மினி கதாநாயகியாக நடித்துகொண்டிருந்த நேரத்தில், இப்படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்திருப்பதை மறக்கமுடியாது.

முத்துசாமி, அன்னம் தம்பதியரின் மகளைக் காதலிக்கும் காதலனாக நடிகர் சிவகுமார் நடித்திருப்பார். இப்படத்தில் சிவகுமாருக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை என்றாலும், சிறந்த இயக்குநர் இயக்குகிறார், படத்தில் நடிப்புலகின் ஜாம்பவான்களான எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, சகஸ்ரநாமம், வி. நாகையா, பத்மினி, நாகேஷ் போன்றோர் நடிப்பதால், வந்த வாய்ப்பை விடவேண்டாம் என்று நடித்திருக்கலாம்.

1980களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு நகைச்சுவைப்பகுதி  எழுதிய ஏ.வீரப்பன் மூன்று மகன்களில் ஒரு மகனாக நடித்திருப்பார்.

புகழின் உச்சியில் இருந்த நகைச்சுவை நடிகர் நாகேஷை வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். நாகேஷும் வக்கீல் கதாபாத்திரத்தை அருமையாகச் செய்திருப்பதையும் மறக்கமுடியாது

இதே கதையை சுமார் 18 வருடங்கள் கழித்து 1985ல் “படிக்காத பண்ணையார்” என்ற தலைப்பில் சிவாஜி, கே.ஆர். விஜயா நடிக்க தயாரித்து இயக்கியிருந்தார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.

நடிப்பு: எஸ்.வி. ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, எஸ்.வி. சகஸ்ரநாமம், வி. நாகையா பத்மினி, நாகேஷ், ஓ.ஏ.கே. தேவர், சிவகுமார், கே.கண்ணன், ஏ.கே.வீராசாமி, கள்ளபார்ட் நடராஜன், ஏ. வீரப்பன் மற்றும் பலர்

பாடல்கள்: உடுமலை நாராயணகவி மற்றும் வாலி

இசை: கே.வி. மகாதேவன்

கதை, வசனம் மற்றும் இயக்கம்: கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.