புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விஷ்ணு விஷால் அமலா பால் நடித்து வரும் புதிய படம் 'மின்மினி'

விஷ்ணு விஷால் - அமலா பால் நடித்து வரும் புதிய படத்திற்கு 'மின்மினி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது 

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 7:30 am

DIN

விஷ்ணு விஷால் - அமலா பால் நடித்து வரும் புதிய படத்திற்கு 'மின்மினி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

'முண்டாசுப்பட்டி' படத்திற்குப் பிறகு இயக்குநர் ராமும், விஷாலும் மீண்டும்  ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது 'மின்மினி' என்று தலைப்பு வைத்துள்ளனர்.  'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கும் 'மின்மினி' படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. ' 'மின்மினி' படத்தின் தயாரிப்பில் 'ஸ்கைலார்க்  மீடியா' ஸ்ரீதர்  இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. 

'எங்கள் மின்மினி படத்தின் தலைப்பை அறிவித்த அடுத்த கணமே ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது. மிக கவனமாக நாங்கள் தேர்ந்தெடுத்த  'மின்மினி' தலைப்பு, படத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியுள்ளது என்று ரசிகர்கள் படத்தை பார்த்த பின்பு கூறுவார்கள். சைக்கோ - திரில்லர் பாணியில் உருவாகி வரும் எங்கள் 'மின்மினி'  படத்தின் டீசரை நாங்கள் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்'  என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.