ட்விட்டரில் இணைந்தார் இயக்குநர் பிரியதர்ஷன்!
ஆரம்ப ட்வீட்களாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்...


தமிழில் சிறைச்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள சில சமயங்களில் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் பிரியதர்ஷன். மலையாளப் படமான Maheshinte Prathikaram-னின் ரீமேக்கில் இருவரும் கூட்டணி அமைத்துள்ளார்கள்.
இந்நிலையில் ட்விட்டரில் இணைந்துள்ளார் இயக்குநர் பிரியதர்ஷன். ஆரம்ப ட்வீட்களாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். 24 பட இயக்குநர் விக்ரம் குமாரின் அடுத்தப் படத்தில் கல்யாணி கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். நாகார்ஜூனாவின் மகன் அகில் கதாநாயகனாக நடிக்கிறார். இத்தகவலை விக்ரம் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...