புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

'விவேகம்' படத்தில் நடித்ததில் காஜல் அகர்வால் மகிழ்ச்சி!

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன்

News image
Updated On :9 ஆகஸ்ட் 2017, 6:58 am

DIN

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்கும் விவேகம் படம் ஆகஸ்ட் 24-ம் தேதி ரிலீஸாகிறது. அஜித் ரசிகர்கள் விவேகம் படத்தின் அப்டேட்ஸ் ஒவ்வொன்றையும் வைரலாக்கி வருகையில் நாளை வெளிவரவிருக்கும் படத்தைப் பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வழக்கத்தை விடவும் மேலாக அஜித் இந்தப் படத்துக்காக பல ரிஸ்க்  காட்சிகளில் நடித்துள்ளார்.

விவேகம் படத்தின் ஆரம்பத்தில் வெளியான அஜித்தின் ஸ்டில் தொடங்கி, டீசர், பாடல் என அவைத்திற்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அஜித், காஜல் அகர்வால் ஆகியோர் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வந்தது. இந்நிலையில் விவேகம் திரைப்பட இயக்குநர் சிவாவின் பேட்டி இன்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதில் அவர் காஜல் அகர்வால் அஜித் இருவரின் கெமிஸ்ட்ரியைப் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார்.

அஜித் சார் காஜல் அகர்வால் இருவரின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அருமையாக வந்துள்ளது. இதனை கெமிஸ்ட்ரி என்பதற்கும் மேலாக, திரையில் அவரவர் பாத்திரத்துக்கு ஏற்ற தன்மையில் மிக கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள். தங்களுடைய கதாபாத்திரத்தின் உணர்வு நிலையை அற்புதமாகத் திரையில் பிரதிபலித்துள்ளார்கள். படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்’ என்றார்.

Story image

காஜல் அகர்வால் தன்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றி கூறும்போது, ‘இந்தக் கதையை சிவா சார் சொல்லும்போதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. என்னுடைய ரோல் மட்டுமல்ல, மொத்த கதையும் அபாரம். ரொம்ப தனித்தன்மையான கதையிது. படத்தின் உருவாக்கத்தில் இன்னும் மிரட்டியிருக்கிறார். நான் முதன்முதலில் வித்தியாசமான ஒரு ரோலில் நடிக்கிறேன். மிகவும் பெருமையாக உணர்கிறேன். படத்தில் எனக்குப் பிடித்த பாடல் ‘காதலாட’. மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சிவா சார் முன்பு ஒளிப்பதிவாளராக இருந்தவர். இந்தப் பாடலை அழகாகப் படம்பிடித்துள்ளார். அனிருத்தின் இசையமைப்பு அபாரம்.

விவேகம் படத்தில்தான் அஜித் சாருடன் முதல் தடவையாக நடித்துள்ளேன். ஷூட்டிங்கின் ஒவ்வொரு நாளும் எனக்கு பிரமிப்பாகவே இருந்தது. அஜித் நல்ல நடிகர் மட்டுமல்ல மிகவும் தன்மையான மனிதரும் கூட. இயல்பாக நடிப்பதுடன் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பவர். அவருடன் சேர்ந்து இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. 

Story image

பத்து வருடங்கள் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம். அதற்கேற்றபடி ஒவ்வொரு படத்திலும் கடுமையாக உழைக்கிறேன். என்னுடைய வெற்றிக்குக் காரணம் ரசிகர்கள். அவர்களுடைய பாராட்டுதல்கள் என்னை உற்சாகமாக வேலை செய்ய வைக்கிறது. அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்’என்று நெகிழ்ச்சியாகக் கூறினார் காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் 'விவேகம்', படத்தைப் போல் மிகவும் எதிர்ப்பார்க்கும் படங்கள் விஜயுடன் 'மெர்சல்'. டோலிவுட்டில் ராணா டகுபதியுடன் 'நானே ராஜூ நானே மந்திரி' ஆகிய படங்களையும்தான். இவற்றின் படப்பிடிப்பையும் முடிந்த நிலையில் அடுத்து இயக்குனர் பி.வாசுவின் படத்தில் நடிக்க உள்ளார். த்ரில்லர் படமான அந்தப் படத்தின் விபரங்கள் விரைவில் வெளிவரும். குவீன் படத்தின் மறு உருவாக்கத்திலும் காஜல் நடிக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.