மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர வேண்டாம்: நடிகை த்ரிஷா வேண்டுகோள்

படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிரவேண்டாம்...

News image
Updated On :19 ஆகஸ்ட் 2017, 12:15 pm

சமீபத்தில் ஒரு சிறுமியுடன் நடிகை த்ரிஷா உள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கும் 96 படத்தின் புகைப்படம் என்றும் த்ரிஷா வேடத்தில் நடிக்கும் சிறுமி அப்புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்தத் தகவல்களை முற்றிலும் மறுத்துள்ள த்ரிஷா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: 

என்னுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பப்படும் ரசிகர்களுக்கு மறுப்பு சொல்லாமல் மகிழ்வுடன் அதற்குச் சம்மதிப்பேன். அதேசமயம் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிரவேண்டாம். ஒரு கதாபாத்திரத்தின் தோற்றத்துக்காகக் கடுமையாக உழைக்கும் இயக்குநரை அது அவமதிக்கும் செயலாகும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.