புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எல்லாத் துறைகளிலும் தமிழன் ஆளவேண்டும்: ஏ.ஆர். ரஹ்மான் விருப்பம்!

பாடலில் வருவதுபோல ஆளப்போறான் தமிழன் என்பதுதான் எங்களுடைய விருப்பமும்கூட...

News image
Updated On :21 ஆகஸ்ட் 2017, 5:24 am

எழில்

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள 100-வது படம் இது. ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியதாவது: 

ஒரு புதிய தலைமுறையை இங்குக் காண்கிறேன். அவர்களுடைய விருப்பத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும். பாடலில் வருவதுபோல ஆளப்போறான் தமிழன் என்பதுதான் எங்களுடைய விருப்பமும்கூட. அதை நீங்கள் உண்மையாக்கவேண்டும். ஒவ்வொரு தொழிலும். மருத்துவம், கல்வி, மாநிலத்தின் தலைவர் என. பண்பிலும் கூட. பெண்களிடம் பண்புடன் நடந்துகொள்ளவேண்டும். அதற்கு நீங்கள்தான் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.