மகள் அக்‌ஷராவுடன் இன்று விவேகம் திரைப்படத்தை பார்க்கிறார் கமல் ஹாசன்

மகள் அக்‌ஷராவுடன் இன்று விவேகம் திரைப்படத்தை பார்க்கிறார் கமல் ஹாசன்

நடிகர் கமல் ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்த முதல் தமிழ்ப் படமான 'விவேகம்’
Published on

நடிகர் கமல் ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்த முதல் தமிழ்ப் படமான 'விவேகம்’ இன்று ரிலீஸாகிறது. மகளுடன் சேர்ந்து இன்று திரையரங்கில் இப்படத்தைப் பார்க்கிறார் கமல்.

'Watching Vivegam with Ms. Akshara Haasan today. Looking forward. நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித்முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று கமல் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த இப்படத்தில் அக்‌ஷரா ஹாக்கராக நடிக்கிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பான இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் கதாபாத்திரங்களும் வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. இதற்கு முன்னார் அஜித்தின் வீரம், வேதாளம் ஆகிய வெற்றிப்பட வரிசையில் விவேகம் இணையுமா என்ற சரியான கணிப்பு இன்று மாலை தெரிந்துவிடும். 

உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் படம் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை டிவீட் செய்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் காலை ஒன்பது மணிக்குத் தனது டிவிட்டரில், 'கடின உழைப்புக்கு மற்றும் படக்குழுவுக்கு ஹாட்ஸ் ஆஃப். ஸ்டண்ட்ஸ் வெறித்தனம்’என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com