திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆன்லைனில் விவேகம்? அதிர்ச்சியில் திரையுலகம்! 

நடிகர் அஜித்தின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் விவேகம் திரைப்படம் இணையத்தில் முழுமையாக வெளியானதால் ரசிகர்களும், திரையுலகமும் அதிர்ச்சியில் உள்ளனர். 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2017, 2:39 pm

DIN

சென்னை: நடிகர் அஜித்தின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் விவேகம் திரைப்படம் இணையத்தில் முழுமையாக வெளியானதால் ரசிகர்களும், திரையுலகமும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இயக்குனர் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில், 'அல்டிமேட் ஸ்டார்' அஜித் நடிப்பில் விவேகம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சுமார் மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து உருவான இந்த திரைப்படதினை அஜித் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர் பார்த்தனர்.

ஆனால் அவர்களுக்குஅதிர்ச்சியூட்டும் விதமாக படம் வெளியாக சில மணி நேரத்துக்கு முன்னதாக சில குறிப்பிட்ட இணையதளங்களில் இந்த திரைப்படம் முழுமையாக வெளியாகி விட்டதாக கூறப்படுகிறது. பலர் இந்தப் படத்தை டவுன்லோடு செய்து பார்த்த விபரமும் தெரிய வருகிறது.

அத்துடன் திரை அரங்கத்திலிருந்து ரசிகர்கள் சிலர் தங்களது  முகநூல் பக்கத்தில், இப்படக் காட்சிகளை 'பேஸ்புக் லைவ்' முறையில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த விபரங்கள் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை ஒருசேர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.