சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பேரன்பு படத்துக்காக முதல்முறையாக இணையும் ராம் - வைரமுத்து!

கவிஞர் நா. முத்துக்குமார் மறைவுக்குப் பிறகு ராம் படங்களில் யார் பாடல் எழுதுவார் என்கிற கேள்வி அனைவரிடமும் எழுந்தது...

News image
Updated On :25 ஆகஸ்ட் 2017, 9:08 am

எழில்

ராம் இயக்கிய 3 படங்களிலும் முழுப் பாடல்களையும் எழுதியவர் மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார். தங்கமீன்கள் படத்துக்காக தேசிய விருதும் பெற்றார்.

நா. முத்துக்குமாரின் மறைவால் தற்போது ராம் - யுவன் - வைரமுத்து என்கிற புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது.

நா. முத்துக்குமார் மறைவுக்குப் பிறகு ராம் படங்களில் யார் பாடல் எழுதுவார் என்கிற கேள்வி அனைவரிடமும் எழுந்தது.

அதற்கு விடை தந்துள்ளது, சமீபத்தில் வெளியான பேரன்பு பட போஸ்டர். தற்போது வெளியாகியுள்ள இரு போஸ்டர்களிலும் படத்தின் பாடலாசியராக வைரமுத்துவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா போன்றவர்கள் நடிப்பில் உருவாகிவரும் பேரன்பு படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர். 

ராம் படங்களில் பாடல் வரிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அதேபோல பேரன்பு படத்திலும் வைரமுத்துவுக்குச் சரியான வேட்டை காத்திருக்கும் என்று நம்பலாம்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.