தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும் சந்தானம் - எம். ராஜேஷ்!
விஜய்யின் மெர்சல் படத்தைத் தயாரித்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ் அடுத்ததாக எம். ராஜேஷ் இயக்கத்தில்...


அட்லி இயக்கத்தில் விஜய்யின் மெர்சல் படத்தைத் தயாரித்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ் அடுத்ததாக எம். ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளது.
இத்தகவலை ட்விட்டரில் வெளியிட்டார் தேனாண்டாள் பிலிம்ஸைச் சேர்ந்த ஹேமா ருக்மணி. தில்லுக்குத் துட்டு படத்துக்குப் பிறகு சந்தானம் - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தைத் தயாரிக்கவுள்ளோம் என்று தகவல் கூறப்பட்டுள்ளது.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எம். ராஜேஷ் அதன்பிறகு பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை. ஆல் இன் ஆல் அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு போன்ற படங்கள் அவருக்கு அதிக விமரிசனங்களையே பெற்றுத் தந்தன. கடவுள் இருக்கான் குமாரு படத்தில் சந்தானத்துக்குப் பதிலாக நகைச்சுவை வேடத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய படங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்த சந்தானத்தை வைத்து மற்றுமொரு நகைச்சுவைப் படம் எடுக்க முன்வந்துள்ளார் ராஜேஷ்.
சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், சக்கைப் போடு போடு ராஜா, செல்வராகவன் இயக்கும் மன்னவன் வந்தானடி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார் சந்தானம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...