பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

செல்வராகவன் இயக்கும் படத்துக்கு சூர்யா ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம்!

News image
Updated On :21 டிசம்பர் 2017, 5:50 am

எழில்

என் கனவுப்படம் என்று கூறினார் இயக்குநர் செல்வராகவன். சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இவ்வாறு கூறியிருந்தார். இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் மிகுந்த ஆர்வத்தை உருவாக்குகிற நிலையில் கதாநாயகி குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.

செல்வராகவன் - சூர்யா இணையும் இந்தப் படம் ஜனவரி மாதம் முதல் தொடங்கவுள்ளது. எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி தேர்வாகியுள்ளார். மேலும் படம் தீபவாளியன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. பொங்கல் அன்று இப்படம் வெளிவருகிறது. சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இதுதவிர, எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.