ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பணம் பதவிக்காக அல்ல, கடமைக்காக, நன்றிக்காக மக்கள் நலனுக்காக ஆன்மிக அரசியல்! ரஜினியைப் பாராட்டிய நடிகை கஸ்தூரி!

தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் துணிவுடன் பகிர்ந்து வருபவர் நடிகை கஸ்தூரி.

News image
Updated On :31 டிசம்பர் 2017, 7:22 am

தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் துணிவுடன் பகிர்ந்து வருபவர் நடிகை கஸ்தூரி. இவரது டிவிட்டர் பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை பரவலாக பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று காலையில் அவரது முதல் டிவிட்டர் பதிவில் 'தலைவா.  வா. வா.  வா vaaaaaaaaaaa !!!!!!!!!  Hurraaaaay  !!!!!' என்று ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து

'பணம் பதவிக்காக அல்ல, கடமைக்காக, நன்றிக்காக மக்கள் நலனுக்காக ஆன்மிக அரசியல் நமது மந்திரம்- உண்மை உழைப்பு உயர்வு  நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும், அடுத்த தேர்தலில் அத்தனை தொகுதியிலும் நம்ம படையும் இருக்கும் ! but..... 1/2' என்று ஒரு பதிவை போட்டதன் மூலம் ஆனால்...என்ற கேள்வியை எழுப்பி 1/2 (பாதி) என்றும் ஒரு தொக்கி நிற்கும்படியாக ஒரு சொற்தொடரைப் பயன்படுத்தியிருக்கிறார்.  

அவர் இந்த பதிவைப் போட்டதைப் பார்த்த சில தனியார் தொலைகாட்சி சானல்கள், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த அவரது தெளிவான கருத்தினைக் கேட்க கஸ்தூரியைத் தொடர்பு கொள்ள முயன்றன. ஆனால் அவர் பதில் தெரிவிக்க மறுத்து தான் பயணத்தில் இருப்பதாகவும் தொந்திரவு செய்ய வேண்டாம் என்றும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ரஜினி அமைதியான முறையிலும் ஆன்மிக வழியிலும் எப்படி அரசியல் செய்யப் போகிறார் என்பதையே கஸ்தூரி தனது பாணியில் பூடகமாக கேட்டுள்ளார். இதைத் தெளிவாக்கும் முறையில் அவரது இன்னொரு டிவீட் இருந்தது. அதில் 2/2 என்று குறிப்பிட்டதால் முந்தைய பதிவின் தொடர்ச்சி அது என்றும் தெளிவாகியது.

கடைசில  சொன்னாரு பாருங்க...அரசியலுக்கு அப்புறமா வருவோம் ....அதுவரை போராட்டம் வேண்டாம், ஆர்பாட்டம் வேண்டாம், அரசியல் பேசவேண்டாம். அப்போ எப்பிடி??? அதுதான் புரியல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.