முத்தக்காட்சிக்கு 19 டேக்குகள் எடுத்த சிரிஷ் - சாந்தினி!

பல டேக்குகள் போனதற்குக் காரணம், பல கோணங்களில் அந்தக் காட்சியை...
முத்தக்காட்சிக்கு 19 டேக்குகள் எடுத்த சிரிஷ் - சாந்தினி!
Updated on
1 min read

ஜாக்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன், ராஜா ரங்குஸ்கி என்கிற படத்தை எடுத்துவருகிறார். இதில் சிரிஷும் சாந்தினியும் காதலர்களாக நடிக்கிறார்கள். 

இந்தப் படத்துக்காக இருவருக்கும் உதடுடன் உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்தக் காட்சிக்காக 19 டேக்குகள் ஆனதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். 

சிரிஷ் ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்தக் காட்சி படமாக்கப்படும்போது எனக்குப் படபடப்பாக இருந்தது. பல டேக்குகள் போனதற்குக் காரணம், பல கோணங்களில் அந்தக் காட்சியைப் படமாக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் ஒரேயொரு கேமராதான் இருந்தது. சிறிய செட் வேறு. இதனால் அதிகமான டேக்குகள் ஆகின என்றார்.

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com