மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கணவருடனான பிரிவு குறித்து நடிகை நந்திதா தாஸ் பேச மறுப்பது ஏன்?

சிலசமயங்கள் சில ஜோடிகள் அற்புதமாக வாழ்வார்கள்...

News image
Updated On :17 பிப்ரவரி 2017, 10:09 am

பிரபல நடிகை நந்திதா தாஸ், தனது கணவர் சுபோத் மஸ்கராவைப் பிரிய முடிவெடுத்துள்ளார். இவர்களுடைய 7 வருட திருமண வாழ்க்கையில் விஹான் என்கிற 6 வயது மகன் உண்டு.

2002-ல் செளம்யா சென்னைத் திருமணம் செய்தார் நந்திதா தாஸ். இருவரும் 2007-ல் விவாகரத்து செய்தார்கள். பிறகு 2010-ல் சுபோத்தைத் திருமணம் செய்து தற்போது அவரைப் பிரிய முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் நந்திதா தாஸ் கூறியதாவது: ஆமாம். நாங்கள் பிரிவதாக வெளியான செய்திகள் உண்மையே. இருவருமே இந்த முடிவை எடுத்துள்ளோம். இருவருக்குமே எங்கள் மகனின் வாழ்க்கை முக்கியம். எனவே எங்கள் மூவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். பிரிவது குறித்து மறைப்பதில் ஒன்றும் இல்லை. மேலும் இதுகுறித்து பேசவும் ஒன்றுமில்லை. ஒரு மகன் இருக்கையில் கணவரைப் பிரிவது என்பது அவ்வளவு எளிதல்ல. எங்களுக்கு மகனின் வாழ்க்கை முக்கியம். அவன் நன்றாக வளர்வதில் இருவரும் உறுதியாக உள்ளோம். நான் இயக்கும் மண்டோ படம் முடிவடையும் வரை நான் மும்பையில் இருப்பேன். அதற்குப் பிறகு நான் வளர்ந்த தில்லிக்கே செல்லலாமா என யோசித்துவருகிறேன் என்று கூறினார். 

சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரிவு குறித்து வெளிப்படையாக பேசமறுத்துவிட்டார் நந்திதாதாஸ். ஒரே துறையில் பணியாற்றியதால் பிரிய நேர்ந்ததா என்கிற கேள்விக்கு நந்திதா தாஸ் கூறியதாவது:

திருமண உறவுகளில் விதிமுறைகள் கிடையாது. நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்ததால் இந்தப் பிரிவு ஏற்படவில்லை. சிலசமயங்கள் சில ஜோடிகள் அற்புதமாக வாழ்வார்கள். உண்மையில் நானும் சுபோத்தும் ஒரே துறையில் பணிபுரிவது கிடையாது. ஒரேயொரு நாடகத்தில் மட்டும் இருவரும் இணைந்து பணியாற்றினோம். எனவே ஒரே துறையில் பணியாற்றுபவர்களால் ஒற்றுமையாக வாழமுடியாது என்று நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை. உறவுகள் மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.