சமீபத்தில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், தமிழ் சினிமாவின் வணிக நிலவரம், லாப நஷ்ட கணக்குகள் பற்றி ஆடியோ வடிவில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கபாலி படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சுமத்தினார். இதைத் தயாரிப்பாளர் தாணு மறுத்தார்.
இந்நிலையில் கபாலி படத்தை சேலத்தில் வெளியிட்ட விநியோகஸ்தர் நந்தா, ஆடியோ வடிவில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மினிமம் கியாரண்டி நடைமுறையில் சேலம் பகுதிக்கான கபாலி விநியோக உரிமையை ரூ. 6.4 கோடிக்கு வாங்கினேன். இன்னும் க்யூப் செலவுகள் எல்லாம் போக மொத்தம் எனக்கு ரூ. 7 கோடி ஆனது. ஆனால் எனக்கு பட வசூலில் இருந்து ரூ. 3.40 கோடிதான் கிடைத்தது. மொத்தமாக எனக்கு ரூ. 3.60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கபாலி தயாரிப்பு நிறுவனத்திடம் இதுகுறித்து முறையிட்டேன். ஆனால் அவர்களிடமிருந்து முறையான பதில் வரவில்லை. தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களையும் மக்களையும் தவறான வசூல் கணக்கைச் சொல்லி ஏமாற்றக்கூடாது. ஏனெனில் இது சினிமா வியாபாரத்தையே அழித்துவிடும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


