பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.
ஃபேஸ்புக், ட்விட்டர் முழுக்க ரஹ்மானின் பாடல்கள்தான். அவருடைய ரசிகர்கள் தனக்குப் பிடித்த பாடல்களைப் பகிர்ந்துவருகிறார்கள்.
2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ரஹ்மான், இன்றும் இந்தியத் திரையுலகின் நெ.1 இசையமைப்பாளராக உள்ளார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் முக்கியமான இசையமைப்பாளராக, பெரிய படங்களின் முதல் தேர்வாக உள்ளார். கூடவே ஹாலிவுட் படங்களிலும் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ரஹ்மானுக்கு 50 வயதா என்று ரசிகர்கள் கொஞ்சம் யோசிக்கலாம். ஆனால், இன்றைக்கும் அவர் பாடல்களில் இளமை ததும்புகின்றன. வற்றாத இளமையைக் கொண்டவைதான் ரஹ்மானின் பாடல்கள்.
வாசகர்களே, உங்களுக்குப் பிடித்த ரஹ்மான் பாடல் என்ன? எதனால் அந்தப் பாடல் உங்களைக் கவர்ந்துள்ளது? கமெண்ட்ஸில் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்துங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு

நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: ‘நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை எட்ட முடியவில்லை’

வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோணம் பொறியியல் கல்லூரியில் பூட்டி சீல் வைப்பு: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சேவைக் குறைபாட்டால் தாய், குழந்தை உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் அபராதம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


