விஜய் நடித்த பைரவா-க்கு எதிராக வழக்கு! திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா? 

பைரவா படத்துக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
விஜய் நடித்த பைரவா-க்கு எதிராக வழக்கு! திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா? 
Updated on
1 min read

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் - பைரவா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தயாரிப்புகளில் தனித்துவம் பெற்ற விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில், பைரவா படத்துக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதையடுத்து, 12-ம் தேதிக்குள் படத்தயாரிப்பாளர், தமிழக அரசு, திரையரங்கு அதிபர்கள் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதுபற்றி புகார் அளிக்கக்கூடிய விவரத்தையும் சமர்ப்பிக்க உத்தவிரப்பட்டுள்ளது.  

இந்தத் திடீர் வழக்கால் படம் திட்டமிட்டப்படி 12-ம் தேதி வெளியாகுமா என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. சிலவாரங்களுக்கு முன்பு, "சிங்கம் 3' படத்துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடுத்ததாக இதே விவகாரத்தில் பைரவா படத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com