அமீர் கானின் டங்கல்: இன்னமும் நிற்காத வசூல் வேட்டை!

உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடை...
அமீர் கானின் டங்கல்: இன்னமும் நிற்காத வசூல் வேட்டை!
Updated on
1 min read

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியானது. நாடு முழுக்க டங்கல் படத்துக்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்தன. 

உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப் படம் முதல் வாரத்திலேயே உலகளவில் ரூ. 300 கோடியை வசூல் செய்தது. பிறகு 13 நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடியை வசூல் செய்து சாதனை செய்தது.

படம் வெளிவந்து பல வாரங்களான பிறகும் உலகம் முழுக்க தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் டங்கல் படத்தின் வசூல் நேற்றுவரை ரூ. 385 கோடி என்பதாக உள்ளது. இந்தியாவில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது. 

வெளிநாட்டில் இதன் வசூல் கிட்டத்தட்ட 29.70 மில்லியன் அதாவது ரூ. 202 கோடியாக உள்ளது. 

அதாவது இதுவரை உலகளவில் டங்கல் படம் கிட்டத்தட்ட ரூ. 587 கோடி வசூலித்து மகத்தான சாதனை படைத்துள்ளது. இன்னும் தொடர்ந்து ஓடி, ரூ. 600 கோடி என்கிற இலக்கை நிச்சயம் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com