அமீர் கான், சாக்ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியானது. நாடு முழுக்க டங்கல் படத்துக்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்தன.
உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப் படம் முதல் வாரத்திலேயே உலகளவில் ரூ. 300 கோடியை வசூல் செய்தது. பிறகு 13 நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடியை வசூல் செய்து சாதனை செய்தது.
படம் வெளிவந்து பல வாரங்களான பிறகும் உலகம் முழுக்க தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் டங்கல் படத்தின் வசூல் நேற்றுவரை ரூ. 385 கோடி என்பதாக உள்ளது. இந்தியாவில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது.
வெளிநாட்டில் இதன் வசூல் கிட்டத்தட்ட 29.70 மில்லியன் அதாவது ரூ. 202 கோடியாக உள்ளது.
அதாவது இதுவரை உலகளவில் டங்கல் படம் கிட்டத்தட்ட ரூ. 587 கோடி வசூலித்து மகத்தான சாதனை படைத்துள்ளது. இன்னும் தொடர்ந்து ஓடி, ரூ. 600 கோடி என்கிற இலக்கை நிச்சயம் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


