தமிழ்நாட்டின் ஒருநாள் முதல்வராக கமல்: பிரேமம் இயக்குநரின் பிரமாண்ட கனவு!

தன்னுடைய புதுமையான யோசனைகளால் அரசு நிர்வாகத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுசெல்வார்...
தமிழ்நாட்டின் ஒருநாள் முதல்வராக கமல்: பிரேமம் இயக்குநரின் பிரமாண்ட கனவு!
Updated on
1 min read

தமிழில் வெளியான நேரம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இதன்பிறகு பிரேமம் என்கிற மலையாளப் படத்தை இயக்கி அதிக கவனம் பெற்றார்.

அல்போன்ஸ் புத்ரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று எழுதியிருப்பதாவது:

முதல்வன் படம் போல ஒருநாள் முதல்வரை நியமிக்கும் வாய்ப்பு இருந்தால், கமல்ஹாசனைத் தமிழ்நாட்டின் ஒருநாள் முதல்வராக நியமிக்கவேண்டும் என எண்ணுகிறேன். ஒருநாள் போதும். இது விரைவில் நடக்கும் என எண்ணுகிறேன். தன்னுடைய புதுமையான யோசனைகளால் அரசு நிர்வாகத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுசெல்வார். இது என் விருப்பம் மட்டுமே. ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால் இந்தக் குழந்தையை மன்னியுங்கள் என்று எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com