சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தது வாழ்நாள் சாதனை என்று இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவன தயாரிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'காலா' . கபாலிக்குப் பிறகு ரஜினிகாந்த் - ரஞ்சித் கூட்டணியில் இந்த படம் உருவாகி வருகிறது.நானா படேகர், ஹ்யுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்
திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கே தாதாவாக வாழ்ந்த ஒருவரின் கதை என்று இப்படம் கூறப்படுகிறது. இதில் கரிகாலன் காலா என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடிக்கிறார்.
ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி விபரம் வருமாறு:
ரஜினிகாந்த் அவர்களுடன் எனது முதல் ஷாட் முடிந்தவுடன், எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஓர் வாழ்நாள் சாதனையை முடித்த எண்ணம் உண்டானது. ரஜினிகாந்த் அவர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமென்பதற்காக நான் நெடுங்காலம் காத்திருந்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி

25.4.1976: சட்டம் வந்தபின் ஆட்குறைப்பு, “லே - ஆப்" இல்லை: மந்திரி தகவல்

வன விலங்குகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


