தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு ட்விட்டரில் முற்றுப்புள்ளி வைத்தார் நாகார்ஜுனா!

நடிகர்கள் சோஷியல் மீடியாக்களில் தங்களது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அரிதான விசயம். ஆனால் நாகார்ஜுனா இப்படி ட்விட்டரில் தன் ரசிகர்களுக்கு நேரடியாக பதில் அளித்தமை கண்டு அவரது ரசிகர்கள் மிகவும்
தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு ட்விட்டரில் முற்றுப்புள்ளி வைத்தார் நாகார்ஜுனா!
Published on
Updated on
1 min read

தன் மகன் அகில் அக்கினேனியின் படங்கள் சரியாகப் போகாத காரணத்தால், அவரது அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ரீதேவியின் மகளான குஷி கபூரை, அகிலுக்கு கதாநாயகியாக்கும் படி.. நாகார்ஜூனா நேரில் சென்று ஸ்ரீதேவியிடம் கேட்டுக் கொண்டார் என்பதாக ஒரு செய்தி தெலுங்கு சினிமா உலகில் வதந்தியாக உலவிக்கொண்டிருந்தது. அதுமட்டுமல்ல டோலிவுட்டில் திறமைசாலி இயக்குனர்களுக்குப் பஞ்சமாகி விட்டதால் தான், புதிதாகத் திரைப்படங்கள் எதையும் அறிவிக்கத் தயங்கிக் கொண்டு, தான் அமைதி காப்பதாகவும் நாகார்ஜுனா குறிப்பிட்டதாகக் கூட ஒரு வதந்தி அக்கட பூமியில் உண்டு.

சமீபத்தில் தனது ‘சரைனோடு’ (சரியானவன்) திரைப்படத்துக்காக ஃபிலிம் ஃபேர் விருது பெற்ற இயக்குனரான போயபட்டி ஸ்ரீனுவிடம், நாகார்ஜூனா தானாக வலியச் சென்று 12 கோடி ரூபாய் ஊதியம் அளித்து தன் மகன் நாக சைதன்யாவுக்காக ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் இயக்கித் தருமாறு கேட்டுக் கொண்டதாகக் கூட இணையத்திலும், தெலுங்கு ஊடகங்களிலும் வதந்திகள் உலவுகின்றன. இதைப்பற்றி ட்விட்டரில் நாக் ரசிகர்கள் கேள்வி எழுப்பவே; உடனே இதில் எதுவுமே உண்மையில்லை... எல்லாமே வதந்திகள் தான் என நாகார்ஜூனா உடனடியாக ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். மேலும் அவர் கூறியது யாதெனில், “தெலுங்குத் திரையுலகில் திறமையான இயக்குனர்களுக்கு பஞ்சமில்லை.அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது தான் நிஜம்” என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்துள்ளதாக செய்தி! 

நடிகர்கள் சோஷியல் மீடியாக்களில் தங்களது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அரிதான விசயம். ஆனால் நாகார்ஜுனா இப்படி ட்விட்டரில் தன் ரசிகர்களுக்கு நேரடியாக பதில் அளித்தமை கண்டு அவரது ரசிகர்கள் மிகவும் ஆனந்தப்பட்டுக் கொள்கிறர்களாம்.

Image courtsy: Nagarjuna's twitter page.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com