‘பச்ச மண்ணுடா அவ’: கதறும் ஓவியா ரசிகர்கள்

‘பச்ச மண்ணுடா அவ’ என்று வாசகங்கள் பதித்த சட்டையை வடிவமைத்துள்ளனர் ஓவியாவின் ரசிகர்கள். சட்டையின் பின் புரத்தில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆன #SaveOviya என்ற ஆஷ்டாகையும் பதித்துள்ளனர். 
‘பச்ச மண்ணுடா அவ’: கதறும் ஓவியா ரசிகர்கள்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்வது, மீம் கிரியேட்டர்களுக்கு புதுக் குஷியை தந்துள்ளது. நிகழ்ச்சியில் வருபவர்களும், காட்சிகளும் பல சர்ச்சைகளுக்கு உள்ளானாலும், அந்த நிகழ்ச்சியில் பலரது மனதைக் கவர்ந்தவர் நடிகை ஓவியா.

அவரது குழந்தை தனமான செயல்களும், அதே சமயம் முதிர்ந்த மனப்பாங்குடன் கருத்துகளை அவ்வப்போது சொல்வது என அவரது அணுகுமுறையின் மூலம் இளைஞர்கள் பலரையும் தன்வசப்படுத்திவிட்டார். இவருக்காகப் பல ரசிகர் மன்றங்களும் உருவாயின. இப்போது ஒரு படி மேலே போய் ‘பச்ச மண்ணுடா அவ’ என்று வாசகங்கள் பதித்த சட்டையை வடிவமைத்துள்ளனர் ஓவியாவின் ரசிகர்கள். சட்டையின் பின் புரத்தில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆன #SaveOviya என்ற ஆஷ்டாகையும் பதித்துள்ளனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புடன் ஆன வாக்கு வாதத்தில் ‘நீங்க ஷட்டப் பன்னுங்க’ என்று அவர் சொன்ன வார்த்தையும் பலரால் விரும்பப்பட்டு, அதைப் பயன்படுத்தி பல மீம்கள் அடித்துத் தள்ளப்பட்டன. இப்பொழுது நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி நடித்து வரும் படத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி பாடல் ஒன்று வெளியாகப் போவதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பும் வந்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com