புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிக் பாஸ்: ஓவியாவை வெளியேற்றத் துடிக்கும் போட்டியாளர்கள்; பெருகும் ரசிகர்கள் ஆதரவு!

யாரிடமும் சரியாகப் பழகுவதில்லை, உரிய மரியாதையை அளிப்பதில்லை என்பதாலேயே போட்டியாளர்கள் ஓவியாவை மீண்டும் மீண்டும் வெளியேற்ற...

News image
Updated On :18 ஜூலை 2017, 7:32 am

எழில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறும் நபருக்கான நாமினேஷன் பட்டியலில் மீண்டுமொருமுறை இடம்பிடித்திருக்கிறார் நடிகை ஓவியா.

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படவேண்டிய நபர்களைப் போட்டியாளர்கள் தேர்வு செய்தார்கள். அவர்களுடைய விருப்பம்: 

சக்தி: வையாபுரி, நமீதா
வையாபுரி: கணேஷ், நமீதா
சிநேகன்: வையாபுரி, ஓவியா
கணேஷ்: ஓவியா, நமீதா
ஆரவ்: நமீதா, கணேஷ்
ஜூலி: ஓவியா, நமீதா
காயத்ரி: கணேஷ், ஓவியா
நமீதா: கணேஷ், ஓவியா
ஓவியா - கணேஷ், நமீதா
ரைஸா: ஓவியா, ஜூலி

இதன் அடிப்படையில் கணேஷ், நமீதா, ஓவியா ஆகிய மூவரும் வெளியேறும் நபருக்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார். 

ஓவியா, இதற்கு முன்பு இருமுறை எலிமினேஷன் அச்சத்தை எதிர்கொண்டுள்ளார். இரண்டுமுறையும் அதிக வாக்குகளைப் பெற்று தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் ஓவியா மீண்டுமொருமுறை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். நிகழ்ச்சியில் உள்ள 10 பேரில், ஓவியாவைத் தவிர்த்துப் பார்த்தால், மீதமுள்ள 9 பேரில் ஆறு பேர் ஓவியா வெளியேறவேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். சக்தி, வையாபுரி, ஆரவ் ஆகிய மூவர் மட்டுமே ஓவியாவுக்கு எதிராக முடிவெடுக்கவில்லை. மற்றபடி காயத்ரி ரகுராம், ஜூலி, நமீதா, ரைஸா, சிநேகன், கணேஷ் ஆகிய ஆறு பேரும் ஓவியா வெளியேறவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதிலும் பெண்கள் அனைவரும் ஓவியாவின் வெளியேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் இதன்மூலம் கூறலாம்.

எனவே, முன்பு போல இந்தமுறையும் ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே நிகழ்ச்சியில் தொடர்ந்து இடம்பெறமுடியும் என்கிற இக்கட்டான நிலைமை ஓவியாவுக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது.  (பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்றால் கூகுள் இணையத்தளத்தில் Bigg Boss Vote என்று தேடினால் வாக்களிப்பது தொடர்பாக யோசனைகள் வழங்கப்படும்.)

யாரிடமும் சரியாகப் பழகுவதில்லை, உரிய மரியாதையை அளிப்பதில்லை என்பதாலேயே போட்டியாளர்கள் ஓவியாவை மீண்டும் மீண்டும் வெளியேற்ற முயல்கிறார்கள். மேலும் ஓவியாவுக்குப் பெருகும் ரசிகர்களின் ஆதரவும் போட்டியாளர்களை உறுத்துகிறது. கேமரா முன்பு ஆடிப்பாடுகிறார், மழையில் நடனமாடுகிறார், இதைப் பார்த்து ரசிகர்கள் வாக்களிக்கிறார்கள் என்று ஓவியா மீது குறை காண்கிறார்கள். இதனால்தான் தொடர்ந்து நாமினேஷனில் இடம்பெறுகிறார்.

ஆனால் வெளியே இதற்கு நேர் எதிரான நிலை உள்ளது. ஓவியாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு பெருகுகிறது. ஓவியா குறித்த மீம்கள் சமூகவலைத்தளங்களில் சுற்றிச்சுற்றி வருகின்றன. இதனால் இந்தமுறையும் ரசிகர்களின் ஆதரவினால் ஓவியா தனது இடத்தைத் தக்கவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வாரம் கணேஷ், நமீதா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பிக் பாஸ் அற்புதமாகத் தொடங்கியுள்ளது. 3 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. நன்றி மக்களே என்று விஜய் டிவி சமீபத்தில் தகவல் வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.