மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உழைப்பு கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி உதாரணம்: இயக்குநர் சுசீந்திரன் பாராட்டு

என்னை நடிப்பில் வியக்க வைத்த இரண்டாவது நடிகர் விஜய்சேதுபதி...

News image
Updated On :22 ஜூலை 2017, 10:19 am

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடித்துள்ள விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது.

நேற்று வெளியான இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் சுசீந்திரன், விஜய் சேதுபதியைப் பாராட்டி ட்விட்டரில் பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நேற்று இரவு 'விக்ரம் வேதா' திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் திரையரங்கில் பார்த்தேன். இப்படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இருவருக்கும் எனது வாழ்த்துகள். கதை சொன்ன விதமும் நடிகர்களைக் கையாண்ட விதமும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

மாதவன், விஜய் சேதுபதி இருவரும் நடிப்பில் அசால்டு பண்ணி இருக்காங்க. (நீ நம்பின கடவுள் உன்னை கைவிட்டாலும், உன் உழைப்பு உன்னை கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி ஓர் உதாரணம்..)

இன்றைய தலைமுறை நடிகர்களில் என்னை நடிப்பில் வியக்க வைத்த இரண்டாவது நடிகர் விஜய்சேதுபதி. இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து நடிப்பில் தன்னை வியக்க வைத்த மற்றொரு நடிகர் தனுஷ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.