விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார். தனக்குத் தோன்றியதைச் செய்தும் பேசியும் வருவதால் அவருக்கென நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகமாகிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக இந்நிகழ்ச்சியில் ஓவியாவுக்கும் காயத்ரி-நமீதா ஆகியோருக்கும் இடையே ஏராளமான கருத்துமோதல்கள் உருவாகிவருகின்றன. இது தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
பரணி போல ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி, ஓவியா ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராக ஏராளமான பதிவுகள் எழுதப்பட்டுள்ளன.
இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஓவியாவுக்குப் பாராட்டுகளை வெளிப்படுத்திய நடிகை ரித்விகா, அடுத்ததாக, காயு... உன்ன தனிமை படுத்தினா நீ செத்துருவ #பிக்பாஸ் என்று ட்வீட் வெளியிட்டுள்ளார். மெட்ராஸ், கபாலி போன்ற படங்களில் நடித்துக் கவனம் பெற்றவர், ரித்விகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

பங்கிபூரில் 64 ஆயிரம் வாக்குளுடன் பிரசாந்த் கிஷோர் வரலாற்று வெற்றி!

அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ்! அடுத்தடுத்து வெளியான பட அறிவிப்புகள்!

அமைச்சரவையில் இடமில்லை! பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



