டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஓவியாவுக்கும் ஜூலிக்கும் போட்டியாக பிக் பாஸில் வரவிருக்கும் புதிய முகம் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவி்றுப்பு கூடிக் கொண்டிருக்கும் வேளையில்,

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:33 pm

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவி்றுப்பு கூடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த வாரம் யாரும் வெளியேறப் போவதில்லை என்று ஏற்கனவே முன்னறிவிப்பு செய்திருந்தனர். ஆள் குறைப்பு இல்லை ஆனால் புதுமுக வரவு ஒன்று உள்ளது என்பதை திடீரெனச் சொன்னார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இன்று புதியதாக ஒருவர் வரப் போகிறார் என்ற அறிவிப்புடன் ஒரு முன்னோட்டம் காண்பிக்கப்பட்டது. பல்லக்கில் ஒரு பெண் வந்து இறங்குவது போலவும், வீட்டில் உள்ள அனைவரும் அவர் யாரென்று ஆர்வமுடன் பார்ப்பது போலவும், அது யார் என்று தெரிவதற்கு முன்னரே சட்டென்று அந்தக் காணொலி முடிந்துவிட்டது. அந்த விளம்பரக் காட்சியில் உள்ளவர் யாராக இருக்கக் கூடும் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்கள் அவர் நடிகை பிந்து மாதவி என்று  கூறுகின்றன.

நிகழ்ச்சி தொடங்கி 34 நாட்கள் முடிந்த நிலையில், புதிய போட்டியாளர் யாராக இருக்கக் கூடும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்றிரவு அது தெரிந்துவிடும். அவர் யாராக இருந்தாலும் ஜூலிக்கும் ஓவியாவுக்கும் போட்டியாக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாங்கள் எவ்வளவோ மாற்றங்களைப் பார்த்துட்டோம் இதையும் பாத்துடுவோம் என்று  பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் புது வரவுக்காக ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், ஓவியா ஆர்மி ஏற்கனவே கவலையில் உள்ளனர். காரணம், ஓவியா வீட்டுக்குப் போகணும், எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை என கண்ணீர் மல்க சொல்லிக் கொண்டிருப்பதால், புது வரவு ஓவியாவை என்ன பாடுபடுத்தப் போகிறாரோ, அதையெல்லாம் ஓவியா எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற குழப்பத்தில் உள்ளனர். 

அது புறம் இருக்கட்டும், நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்து வருவதால், புதிய நபரைக் களம் இறக்கியிருக்கும் பிக் பாஸ் நிச்சயம் புத்திசாலிதான். பின்னே, மீடியாக்கள் முதல் சாமானியர்கள் வரை இத்தனை பேரை நிகழ்ச்சியைப் பற்றி பேச வைத்துவிட்டாரே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.