ரஜினி அடுத்து நடிக்கவுள்ள காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் 2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன் தலைப்பு - காலா கரிகாலன். நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இது ரஜினியின் 164-வது படம்.
இந்நிலையில் மும்பை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட 1 நிமிடப் பாடல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
மும்பையில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர் இணையத்தளங்களில் கசியவிட்டிருக்கலாம் என்றறியப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


