பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தியாவின் முதல் 8கே படத்தில் பிரபுதேவா!

இந்தப் படத்தில் ஒரு சிறப்பம்சம் - 8கே ரெசொல்யூஷன் தொழில்நுட்பம் கொண்ட கேமராவில் படமாக்கப்படுகிறது.

News image
Updated On :3 ஜூன் 2017, 9:19 am

"டோரா', "அறம்' என தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா தற்போது "கொலையுதிர் காலம்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இப்போது இந்தப் படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது. 

"உன்னைப் போல் ஒருவன்', "பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி, கொலையுதிர் காலம் படத்தை இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் யுவன் இப்படத்தின் தயாரிப்பாளர்.

ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற "ஹஷ்' படத் தழுவலாக இப்படம் உருவாகி வருகிறது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர், வீட்டில் தனியாக இருக்கும்போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா என்பது தான் "ஹஷ்' படத்தின் திரைக்கதை. ஹஷ் படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் சாயல், "கொலையுதிர் காலம்' படத்தின் பிரதான கதாபாத்திரத்திலும் இருக்கும். மற்றபடி "ஹஷ்' படத்துக்கும் எங்களது படத்துக்கும் சம்பந்தமில்லை எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொலையுதிர் காலம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் சக்ரி டோலட்டி. இதில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஒரு சிறப்பம்சம் - 8கே ரெசொல்யூஷன் தொழில்நுட்பம் கொண்ட கேமராவில் படமாக்கப்படுகிறது. இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பத்துடன் படமாக்கப்படும் முதல் படம் இது. ஹாலிவுட்டில் 2013 முதல் இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

காமோஷி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். பூமிகாவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ளது.

Related Article

டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளிவருகிறது கமல் நடித்த ஆளவந்தான்: தாணு அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் நடிப்பில் படம் இயக்குகிறார் சீமான்

இயக்குநர் வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணப் புகைப்படங்கள்!

'பே வாட்ச்' படத்தை வெளியிட தடையில்லை: உயர்நீதிமன்றம்

டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.