ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அக்‌ஷய் குமார் பட டிரெய்லரைப் பாராட்டிய மோடி!

தூய்மை இந்தியா திட்டத்துக்கான என்னுடைய சிறிய பங்களிப்பு என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

News image
Updated On :13 ஜூன் 2017, 7:33 am

அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளிவரவுள்ள டாய்லெட் ஏக் பிரேம் கதா (Toilet Ek Prem Katha) படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த டிரெய்லரை பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் டேக் செய்திருந்தார் அக்‌ஷய் குமார். தூய்மை இந்தியா திட்டத்துக்கான என்னுடைய சிறிய பங்களிப்பு என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து படத்தின் டிரெய்லரைப் பாராட்டி மோடி, ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

தூய்மை குறித்த கூடுதல் விழிப்புணர்வை அக்‌ஷர் குமாரின் படம் ஏற்படுத்துகிறது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக இந்தியாவிலுள்ள 125 கோடி மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மோடி கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தை ஸ்ரீ நாராயண் சிங் இயங்கியுள்ளார். இப்படத்தில் பூமி பெட்னேகர், அனுபம் கெர் போன்றோர் நடித்துள்ளார்கள். 

தூய்மை இந்தியா என்கிற ஸ்வ்ச் பாரத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 2019-க்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத சுகாதாரமான சமூகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேச மேம்பாட்டுக்கும், வீணாகும் குப்பைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.