
விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடியாக நடிக்கும் படம் - 96. பூஜையுடன் நேற்று தொடங்கியது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பிரேம்குமார். இவர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.
முதல்முறையாக விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவரும் ஒன்றாக நடிப்பதாலும் 96 என்கிற வித்தியாசமான படத்தலைப்பினாலும் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்து விஜய் சேதுபதி பேட்டியளித்ததாவது: 12-ம் வகுப்பில் ஏற்படும் காதல் பற்றிய படம்தான் இது. 1996 என்பது வருடத்தைக் குறிக்கும். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பாரா என்று எண்ணினேன். ஆனால் கதை கேட்டுவிட்டு அவர் நடிக்க சம்மதித்தார்.
இந்தப் படத்தில் பள்ளி மாணவனாக சில காட்சிகளில் வருவேன். ஒரு கதாபாத்திரத்தால் உண்டாகும் சவால் குறித்து நான் கவலைப்படமாட்டேன். கதைக்கு ஏற்றவாறு உழைப்பதே என் பணி. யாருக்கும் என்னை நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இந்தப் படம் தவிர விக்ரம் வேதா, கருப்பன், சீதகாதி போன்ற படங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.