அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கடவுளும் நானும் உன்னுடன் எப்போதும் இருப்போம்: அஞ்சலிக்கு ஜெய் 'ஸ்பெஷல்' வாழ்த்து!

நீ நீயாக இருப்பதால் என்னுடைய ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றுகிறாய்...

News image
Updated On :16 ஜூன் 2017, 12:55 pm

நடிகை அஞ்சலி - நடிகர் ஜெய் ஆகியோரின் காதல் குறித்து தொடர்ந்து ஊடகங்களில் எழுதப்பட்டு வருகின்றன. எங்கேயும் எப்போதும் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்.

இந்நிலையில் ஜெய் - அஞ்சலி ஆகிய இருவரும் தங்கள் உணர்வுகளை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். 

நடிகை அஞ்சலிக்குத் தான் எழுதிய பிறந்தநாள் வாழ்த்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெய். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நீ எப்படி எனக்கு வெகுசிறப்போ அதுபோல உனக்குப் பிறந்தநாள் அமைய வாழ்த்துகள். நீ நீயாக இருப்பதால் என்னுடைய ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றுகிறாய். கடவுளும் நானும் உன்னுடன் எப்போதும் இருப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஞ்சு என்று வாழ்த்தியுள்ளார். 

இதற்குப் பதில் அளித்த நடிகை அஞ்சலி, என்னுடன் இருப்பதற்காக நன்றி ஜெய். எப்போதும் அதுபோல இருப்பாய் என எண்ணுகிறேன். சிறப்பு வாழ்த்துக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.