அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ரஹ்மான் 25: லண்டனில் தொடங்கும் இசை சுற்றுப்பயணம்!

தனது 25 வருட திரைப்பயணத்தையொட்டி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

News image
Updated On :17 ஜூன் 2017, 5:18 am

தனது 25 வருட திரைப்பயணத்தையொட்டி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர். ரஹ்மான். 

'Yesterday, Today, Tomorrow’ என்கிற இந்த இசை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8 அன்று லண்டனில் நடைபெறுகிறது. 

இதுகுறித்து ரஹ்மான் ஓர் அறிக்கையில் கூறியதாவது: கடந்த 25 வருடங்களாக நீளும் இசைப்பயணம் உண்மையிலேயே மறக்கமுடியாதது. ஆச்சர்யமானது. இந்த இசை சுற்றுப்பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான். என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. 

ரோஜா முதல் ராக் ஸ்டார், காற்று வெளியிடை படங்கள் வரைக்குமான என் இசைப்பயணத்தைக் கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.