புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

புதுமைக்குக் கிடைத்த வெற்றி! விவேகம் படத்தில் சர்வைவா பாடலைப் பாடிய யோகி.பி உருக்கம்!

ஒரு பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏகோபித்த

News image
Updated On :21 ஜூன் 2017, 11:16 am

DIN

ஒரு பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு மற்றும் வரவேற்பு பெறுவது முக அரிது. 'விவேகம் ' படத்தின் 'சர்வைவா ' பாடல் இந்த அரிய காரியத்தை செய்துள்ளது. 

உலக புகழ் பெற்ற தமிழ் ராப்பர் யோகி B  மற்றும் அனிருத் சேர்ந்து அமைத்துள்ள இப்பாடல் வெளியான நிமிடத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதை பற்றி யோகி B  பேசுகையில்,  'சர்வைவ' எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி . அஜித் அவர்களின் நடிப்புக்கும், அனிருத்தின் இசைக்கும்  ரசிகனான எனக்கு இப்பாடலின் மூலம் இருவருடனும் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம். எனது இசை வாழ்க்கையில் 'சர்வைவா' ஒரு மைல் கல்லாகும்.

Story image

இப்பாடலை EDM என்ற மேற்கத்திய இசை பாணியில் அமைத்துள்ளோம் . இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு  புதுமையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம் . அஜித் அவர்களுடனும் இயக்குனர் சிவா அவர்களுடனும் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடனும் ஒன்று சேர எனக்கு வாய்ப்பு அளித்த அனிருத் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

அனிருத்தின் துள்ளலான இசையும், எனது பாணி வரிகள் மற்றும் ராப்பிங்கும் அஜித் சாரின் மிரட்டும் கம்பீர தோற்றமும் ஒன்று சேர்ந்துள்ள இப்பாடல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதில் எனக்கு அளவு கடந்த சந்தோஷம். இப்படம் வெளியாகும் போது திரை அரங்கில் மக்களோடு காண காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார் யோகி பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.