இயக்குநர் பா.இரஞ்சித் - ரஜினி மீண்டும் இணையும் படத்தில் ரஜினி ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார்
இதுகுறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கினார். இந்தப் படம் கடந்த வருடம் வெளியானது.
இப்போது ரஜினி - பா. இரஞ்சித் கூட்டணி மீண்டும் இணையும் படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஷங்கரின் 2.0 படத்துக்குப் பிறகு இது ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பா.இரஞ்சித் - ரஜினி மீண்டும் இணையும் படத்தில் ரஜினி ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார். கபாலி படத்தில் முதலில் வித்யா பாலன் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவரால் நடிக்கமுடியாமல் போகவே அந்த வாய்ப்பு ராதிகா ஆப்தேவுக்குச் சென்றது.
இந்நிலையில் இந்தப் படத்திலும் வித்யா பாலனை நடிக்க வைக்க மீண்டும் அவரை அணுகியது படக்குழு. கதையைக் கேட்ட வித்யா பாலன், நடிக்கச் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
மும்பையில் ஒரு விழாவில் வித்யா பாலன் கலந்துகொண்டபோது இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், விரைவில் இதுபற்றி தெரியவரும் என்று பதில் அளித்தார்.
தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் இதுவரை ஒரு தமிழ்ப் படத்திலும் வித்யா பாலன் நடித்ததில்லை. லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் வித்யா பாலன் தான். ஆனால் பிறகு அவர் அப்படத்திலிருந்து விலகியதால் மீரா ஜாஸ்மினுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பலவருடங்களுக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகவுள்ளார் வித்யா பாலன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


