

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.
ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்தர ஆண்டைக் கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களைத் திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் பாகுபலி 2 படமும் இடம்பெற்றுள்ளது.
இந்திய பிரதமர் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாகுபலி 2 படத்தை இவ்விழாவில் காணவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.