

பெண்களின் பாதுகாப்புக்காக சேவ் சக்தி என்கிற அமைப்பை ஆரம்பிக்கவுள்ளார் நடிகை வரலட்சுமி.
மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி இந்த அமைப்பு தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து வரலட்சுமி கூறியதாவது:
என்னுடைய பதிவுக்கு நிறைய கருத்துகள் கிடைத்தன. அப்போதுதான் பெண்கள் எந்தளவுக்குத் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்று தெரியவந்தது. ஆனால் அவர்களால் வெளியே துணிச்சலுடன் சொல்லமுடியவில்லை. ஒரு வலைப்பதிவைத் தாண்டி இந்த விழிப்புணர்வைக் கொண்டுபோகவேண்டும் என்று எண்ணுகிறேன். வழக்கறிஞர்களிடம் பெண்களுக்கு நேரும் தொல்லைகளுக்கான தீர்வு குறித்து பேசிக்கொண்டிருந்தபோதுதான் சேவ் சக்தி என்கிற அமைப்பை ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றியது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்போகிறேன்.
பெண்களுக்கு நேரும் அநியாயங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கவேண்டும். அப்போதுதான் பெண்கள் தைரியத்துடன் பாலியல் தொல்லைகள் குறித்து துணிச்சலுடன் புகார் அளிப்பார்கள். அதேபோல அத்தகைய புகார்கள் மீது ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும். தமிழ்த் திரைத்துறையில் பெண்களுக்காக ஒரு தனி அமைப்பும் ஆரம்பிக்கப்படவேண்டும். பெஃப்சி அமைப்புடன் கலந்தாலோசித்து பெண்களுக்க்கென தனி அமைப்பு அமைக்க முயற்சி செய்வேன் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.