நடிகர் சங்கத் தேர்தலின்போதே நடிகர் விஷாலின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைவது குறித்தும் அதன் மோசமான வசூல் குறித்தும் எதிரணியினர் பேசிவந்தார்கள். சமீபத்தில் நடிகர் சங்கத்தை முற்றுகையிட வந்த தயாரிப்பாளர் தாணுவும் இதே விவகாரத்தைப் பேசினார். தற்போது இயக்குநர் சேரனும் விஷாலின் படங்களின் வசூல் குறித்து விமரிசனம் செய்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:
விஷால், தான் நடிச்ச படங்கள்ல கூட ஒரே ஒரு படம், இந்த உலகத்துக்கும் மக்களுக்கும் பயன்படுற மாதிரி சிறப்பான படம் நடிச்சேன்னு சொல்ல முடியுமா? மக்களின் மூளையை மழுங்கடிக்கிற, இன்னும் ஆதிகால சினிமா போல இறங்கி டப்பாங்குத்து ஆடிக்கிட்டு இருக்குற படங்கள் பண்ற உங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது.
உங்கள வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்ப எந்த நிலையில இருக்காங்கனு தெரியுமா? உங்க படத்தோட ஓப்பனிங் ஷோவில் உங்களுக்கு கை தட்டக்கூட ஆள் இல்ல, ஆனா நீங்க வாங்குற சம்பளம் எவ்வளவு? எவ்வளவு பேசுறீங்க… அதை நியாயமா வாங்கிருந்தா உங்கள வச்சு படம் பண்ண தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாம எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க?
உங்கள அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நீங்க செய்தது என்ன? அட்லீஸ்ட் இப்ப அவரு என்ன செய்றாருன்னு நினைத்ததுண்டா? அவருக்கு நீங்க செட்டில் பண்றதா சொன்ன 45 லட்சம் என்ன ஆச்சு? அதுக்கு அப்புறம் எத்தனையோ கோடிகள் சம்பாதிச்சும் உங்களுக்கு அந்த பணத்த கொடுக்குற மனசு ஏன் வரல… அவரு இப்போ மிகுந்த நெருக்கடியிலதான் இருக்காரு… அந்த தயாரிப்பாளரைப் பற்றி உங்களுக்கு கவலையோ அக்கறையோ இல்ல… அந்த சிறு நன்றியக் கூட நினைக்காத நீங்க எப்படி சிறு படத்தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுறீங்க… என்று விஷாலைச் சாடியுள்ளார் இயக்குநர் சேரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.